Vishal-JAnbazhagan-DMK

தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருகிற ஏப்ரல் 2-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் டி.சிவா, கேயார், விஷால் உள்ளிட்ட 5 அணிகள் களமிறங்குகின்றன. ஒவ்வொரு அணியை சேர்ந்தவர்களும் தங்களது வேட்பாளர்களையும், தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். தயாரிப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று 5 அணியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு தயாரிப்பாளர்களின் வீட்டுக்கும் சென்று தங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை தெரிவித்து ஓட்டு கேட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் விஷால் சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வான ஜே.அன்பழகனை சந்தித்து பேசியுள்ளார். கடந்த வாரம் ஜே.அன்பழகனை சந்தித்த விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தனது அணிக்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் விஷால் அணியின் சார்பாக இயக்குநர் மிஷ்கின், பாண்டிராஜ், பிரபு, பிரகாஷ்ராஜ், கே.இ.ஞானவேல்ராஜா உள்ளிட்டோர் நேற்று மதுரையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

விஷால் தலைமையிலான அணிக்கு ‘நம்ம அணியினர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.