விஷால் தற்போது மிஷ்கின் இயக்கிவரும் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்துவருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சிதம்பரத்தை அடுத்த பிச்சாவரத்தில் நடந்து வருகிறது.

அங்குள்ள மான்குரோவ் காடுகளில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா பங்கேற்கும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

சிதம்பரம் என்றாலே நடராஜர் கோவில் பேமஸ் இல்லையா? சிவராத்திரியை ஒட்டி படக்குழுவினர் அனைவரும் நடராஜர் கோவிலுக்கு சிறப்பு தரிசனம் செய்ய சென்றிருக்கின்றனர்.

கோவிலில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா ஆகியோருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விஷாலும், ஆண்ட்ரியாவும் கையில் மாலையுடன் கோவிலை சுற்றி வந்தனர்.

இதை பார்த்த மக்கள், இருவரும் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக நினைத்ததுடன் அவர்களை மொபைல்போனில் படம் எடுத்து அதனை இணையத்தளத்தில் பரப்பியுள்ளனர்.

விஷால் தரப்பில் முட்டாள் முட்டாள்தனமான கற்பனை. ஊருக்கே தெரியும் நாங்கள் சாமி கும்பிட்டோம் என்பது என்று நொந்து போய் கூறியுள்ளார் விஷால்.