வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நீதிடா நேர்மைடா.. சத்யராஜ் படத்தை ரீமேக் செய்யும் விஷால்

Vishal: கடந்த சில வருடங்களாக விஷால் ஏகப்பட்ட தோல்விகளை சந்தித்தார். அதிலிருந்து அவரை மீட்கும் விதமாக மார்க் ஆண்டனி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.

அதைத்தொடர்ந்து இந்த வருடம் வெளியான ரத்னம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் விஷால் எப்படியாவது ஒரு வெற்றியை கொடுத்து தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அதேபோல் அவர் இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2 வருட கணக்கில் படமாக்கப்பட்டு வருகிறது. எப்போது அது வெளியாகும் என்பது விஷால் மட்டுமே தெரிந்த ஒன்று.

சத்யராஜ் படத்தை ரீமேக் செய்யும் விஷால்

இந்த சூழலில் அவர் சத்யராஜ் நடிப்பில் 200 நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படத்தை ரீமேக் செய்யப் போவதாக செய்திகள் கசிந்துள்ளது. பி வாசு சத்யராஜ் கூட்டணியில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் வால்டர் வெற்றிவேல்.

அந்த படத்தை தான் விஷால் ரீமேக் செய்ய இருக்கிறாராம். அதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தற்போது சத்தம் இல்லாமல் நடந்து வருகிறது.

ஆனால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்ற விவரங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை. மேலும் விஷால் இரும்புதிரை கூட்டணியுடன் இணைய போவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

அதனால் வால்டர் வெற்றிவேல் ரீமேக் எப்போது தொடங்கும் என்பதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் தெரியவரும். அதுவரை அவரின் ரசிகர்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.

Trending News