சமீபத்தில் இணையதளம் ஒன்றில் தமிழக மக்கள் சோம்பேறிகள், அவர்களுக்கு மதுடைகள் போது… என்று விஷால் கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்று விஷால் கூறியுள்ளார். அதோடு தன்னைப்பற்றி தவறான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது… தமிழக மக்களை நான் பெரிதும் மதிக்கிறேன். என் மீது வீண்பழி சுமத்துவது போல் இந்த செய்தியைவெளியிட்டுள்ள TamilStar.com என்ற வலைத்தளத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற வலைதளத்தில் உண்டாக்கப்படும் செய்தியால் தமிழக மக்களின் மனதில் வேற்றுமையை உண்டாக்க வழி செய்கிறார்கள். மேலும் சமீபகாலமாக முகம் தெரியாத நபர்கள் போன் மூலம் (+96896520944, +19196382854, +14436360331) தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.