பொன்வண்ணன் விஷால் செயல் பிடிக்காமல் சங்கத்தில் இருந்து சங்க துணை தலைவர் பதவியை பகீரங்கமாக ராஜினாமா செய்தார் என  இரண்டு நாட்களுக்கு முன்பு  அனைத்து மீடியாக்களிலும் பேசப்பட்டது ஆனால் பொன்வண்ணன் இதை பற்றி எதுவும் கூறவில்லை.

ponvannan

ஆனால் இப்பொழுது தனது ராஜினாமா கடிதத்தைத் திரும்ப பெற்று மீண்டும் பதவியில் அமர்ந்துள்ளார்.இதை பற்றி இன்று பத்திரிக்கையாளரை சந்தித்த பொழுது கூறினார்.

nadikar

அதில் விஷால் கடந்த 6 ம் தேதி ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுவதை அறிந்த தலைவர் நாசர், கார்த்தி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தோம். எங்களுக்கு இந்த விஷயம் பற்றி எதுவும் தெரியாது. நடிகர் சங்கம் அரசியல் இல்லா பணிகளாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.

அதற்க்கு பிறகு விஷால் என்னை தொடர்பு கொண்டு நான் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தேர்தலில் போட்டியிட நினைத்தேன் அதனால் இவ்வளவு பெரிய பிரச்சனை வரும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை இனிமேல் இதுபோல் நடக்காது என வருத்தம் தெரிவித்தார்.

vishal

சங்கத்தின் நலனை நினைவில் கொண்டு நான் மீண்டும் ஏன் பணியை தொடருகிறேன் மலேசியா வில் நடைபெறவுள்ள நட்சத்திர கலைவிழா பணிகள் நடந்து வருகிறது என்று குறிப்பிட்டார்.