Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடிமாட்டு ரேட்டுக்கு வந்த விமல்.. அவர் குறைத்துள்ள சம்பளம் விபரம்
பசங்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விமல். அறிமுக படமே நல்ல வெற்றிப் படமாக அமைந்து பிரபலமான நடிகராக மாற்றியது. அதன்பிறகு தொடர்ந்து எத்தன், வாகைசூடவா, தூங்கா நகரம் என வெற்றிப் படங்களாக கொடுத்து வந்தார்.
மேலும் சுந்தர் சி இயக்கிய கலகலப்பு, சற்குணம் இயக்கத்தில் களவாணி, பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா என அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் மினிமம் கேரண்டி நடிகர் என பெயர் பெற்றார்.
ஆனால் அதன்பிறகு அந்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. தொடர் தோல்வி படங்களை கொடுத்து சோகத்தில் இருந்தவருக்கு மன்னர் வகையறா என்ற திரைப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தை அவரே தயாரித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் கதை தேர்வில் சொதப்பி வருகிறார். இதனால் கிட்டத்தட்ட ஒரு கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த விமல் தற்போது பட வாய்ப்பு இல்லாததால் தனது சம்பளத்தை 25 லட்சமாக குறைத்து விட்டாராம். சினிமாவில் அடிமட்ட நடிகர்கள் வாங்கும் சம்பளம் அளவுக்கு இறங்கி விட்டாரே என அவரது நலம் விரும்பிகள் கவலைப்பட்டு வருகின்றனராம்.
விமல் ஸ்ரேயா நடித்துள்ள சண்டைக்காரி படத்தைத்தான் விமல் பெரிதும் நம்பி இருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மீண்டு வருவார் விமல்.. காத்திருப்போம்!
