fbpx
Connect with us

Cinemapettai

குரு பாலாவை மறைமுகமாக கலாய்த்த சிஷ்யன் சீயான்.. இருந்தாலும் ரொம்ப குசும்பு சார் உங்களுக்கு!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

குரு பாலாவை மறைமுகமாக கலாய்த்த சிஷ்யன் சீயான்.. இருந்தாலும் ரொம்ப குசும்பு சார் உங்களுக்கு!

தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலாவை அவரின் சிஷ்யனான சீயான் விக்ரம் பிரஸ்மீட்டில் கலாய்த்தது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் சமீபத்தில் வெளிவந்த ஆதித்ய வர்மா தான்.

சீயான் எப்பொழுதும் நன்றி மறக்காதவர். சினிமாவுலகில் பொறாமையில்லாத நல்ல மனிதர். அதன் காரணமாகவே தன்னை அறிமுகப்படுத்திய பாலாவே தன் மகனையும் அறிமுகப்படுத்த வேண்டும் என ஆசைப்பட்டு ஆதித்ய வர்மா ரீமேக்கை இயக்க சொன்னார்.

ஆனால் வர்மா என்ற பெயரில் இயக்குனர் பாலா எடுத்த திரைப்படம் தயாரிப்பாளர் தரப்புக்கு திருப்தி அளிக்காததால், அந்த படத்தை கிரிசய்யா என்ற இயக்குனரை வைத்து மீண்டும் சூட்டிங் நடத்த போவதாக E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்தது.

இதனால் பாலா அந்த படத்திலிருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்திருந்தார். ஆதித்ய வர்மா பிரஸ்மீட்டில் சியான் விக்ரம், படத்தின் மூலக் கதையை மாற்றாமல் எடுத்தாலே ரீமேக் படங்கள் வெற்றி பெறும் என பாலாவை மறைமுகமாக தாக்கிப் பேசியுள்ளாராம்.

இதனால் பாலா தரப்பு கடும் அப்செட்டில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துருவ் விக்ரம் நடிப்பில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top