Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்ரமின் ஸ்கெட்ச் ஒரு வாரத்தின் மொத்த வசூல் இவ்வளவு தானா.!
விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச்.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் பொங்கலுக்கு உலகெங்கும் ரிலீஸ் ஆகியுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படமும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது இவர்களின் இரண்டு படமும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது சில ரசிகர்களிடம்.
ஆனால் ஸ்கெட்ச் படம் கொஞ்சம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது.இந்த படம் தமிழ் நாட்டில் மட்டும் 20.2 கோடி வசூல் சேர்த்துள்ளது.
அதேபோல் உலகம் முழுவதும் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் இதுவரை 30 கோடி வரை வசூல் செய்துள்ளது, இது குறைவான வசூல் என்றாலும் இந்த வாரம் எந்த தமிழ் படமும் திரைக்கு வரவில்லை என்றால் இன்னும் கொஞ்சம் வசூல் சேர்க்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் கூறி வருகிறார்கள்.
