செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ரைட்டு! இன்னும் 3 வருஷத்துக்கு விக்ரம் படம் வராது போல

இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தங்களான் படம் வெளியானது. ஆனால் படத்துக்கு ஓரளவுக்கு சிறந்த விமர்சனம் வந்தாலும் கூட, படத்துக்கு வசூல் ரீதியான வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் விக்ரம் அடுத்ததாக வீர தீர சூரன் படத்தை தான் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க, நடிகர் விக்ரம் இளம் இயக்குனர்களுடன் கைகோர்க்கும் முடிவில் இருக்கிறார். அப்படி அடுத்ததாக அஸ்வின் மடோன் மற்றும் பார்க்கிங் பட இயக்குனரிடம் கைகோர்க்கும் முடிவில் இருக்கிறார். இப்படி இருக்க, அஜித்தை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் ஒரு இயக்குனருடன் கைகோர்க்கும் முடிவில் இருக்கிறார்.

ஐயோ இவரா?

இப்படி இருக்க சமீபத்தில் அஜித்தை வைத்து 2 வருடமாக படமெடுத்துக்கொண்டு இருக்கும் ஒரு இயக்குனர் விக்ரமை சந்தித்துள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியில் சீக்கிரமே ஒரு படம் வரும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது.

மேலும் தற்போது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் விக்ரம் கூட்டணி ஒரு சிலருக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், நிறைய பேர், இவரு ஒரு படத்தையே 2 வர்ஷம் இழுத்தடிக்கிறாறு..

இவரு கைய்யில் விக்ரம் சிக்கினால் அவ்வளவு தான் இன்னும் இரண்டு, மூன்று வருடத்துக்கு எந்த படமும் வராது என்றும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் இயக்குனர் மகிழ்திருமேனி ஒரு சிறந்த இயக்குனர்.

அவர் ஒவ்வொரு காட்சியையும் நுணுக்கமாக எடுப்பார். அவருக்கு திருப்தி ஏற்பட்டால் தான் அடுத்த காட்சிக்கு செல்வார். அதனால் தான் படப்பிடிப்பில் இத்தனை தாமதம் நடக்கிறது.

- Advertisement -

Trending News