தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் தமிழ் சினிமா தாண்டி இந்தியா முழுவதும் உயர்ந்துள்ளது.

Thalapathy Vijay with Gogo Requiem

பல பிரச்சனைகளை எதிர் கொண்டு, வருமா வராதா என்ற சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக அக்டோபர் 18ம் தேதி தீபாவளியன்று மிகப் பிரம்மாண்டமாக வெளியானது மெர்சல் திரைப்படம்.

படம் வெளிவந்த பின்னும் டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி வரி ஆகிய வசனங்களால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

vijay mersal

அதுவே அந்தப் படத்தை 25 நாள் வரை ஓட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. 25 நாளில் 250 கோடியைத் தொட்டிருக்குமா என விஜய் ரசிகர்கள் இந்நேரம் கூகுள் செய்து  கொண்டிருப்பார்கள். ஆந்திரா, தெலுங்கானாவில்  வெளியான இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான அதிரிந்தி படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இன்றும் நாளையும் அங்கு பல தியேட்டர்களில் 70 சதவீதம் வரை முன்பதிவிற்கான வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.25வது நாளான இன்று 250 கோடியைக் கடக்கிறதோ இல்லையோ நாளைக்குள் 250 கோடியைக் கடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.

vijay

இந்நிலையில் மெர்சல் வெளிவந்து 25 நாட்கள் ஆகிய நிலையில் ரசிகர்கள் இதை டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து கொண்டாடினார்கள்.

அதை தொடர்ந்து இப்படம் தற்போது வரை ரூ 225 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம். இந்த வருடத்தில் பாகுபலி-2விற்கு பிறகு மிகப்பெரிய ஹிட் மெர்சல் தானாம்.

mersal magic
mersal magic

மேலும், தெலுங்கில் வெளியான அதிர்ந்தி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில், விரைவில் 250 கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் மெர்சல் இணையும் என்று ஆவலுடன் கூறுகிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஜோதிடர்கள்.

விஜய் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றுள்ள படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள மெர்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. அட்லீக்கு விஜய் மீண்டும் ஒரு படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுப்பார் என்பது மட்டும் உறுதி.