விஜய்யின் பைரவா படம் இன்று உலகமெங்கிலும் வெளியாகிறது. சாதாரண நாட்களில் விஜய் படம் ரிலீசானாலே கொண்டாடி மகிழும் விஜய் ரசிகர்கள், இப்படம் பொங்கல் வெளியீடு என்பதால் வழக்கத்தைவிட அதிகப்படியான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக, தமிழகமெங்கிலுமுள்ள முக்கிய தியேட்டர்களில் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் கட்அவுட்டுகள் வைத்து வருகின்றனர். இந்நிலையில், திருநெல்வேலியில் உள்ள ராம் தியேட்டரில் 150 அடி உயரத்தில் விஜய்க்கு கட்அவுட் வைக்கிறார்கள்.

விஜய்யின் முந்தைய படமான தெறி படம் வெளியானபோது இதே தியேட்டரில் விஜய்க்கு 140 அடி உயரத்தில் பிரமாண்டமான கட்அவுட் வைத்தனர். ஆனால் அந்த கட்அவுட் எதிர்பாராதவிதமாக கீழே சரிந்தது. அதனால் இனிமேல் இந்த மாதிரியான அதிக உயரத்தில் கட்அவுட் வைக்க வேண்டாம் என்று விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது பைரவா விஜய்க்கு 150 அடி உயரத்தில் கட் அவுட் வைக்கிறார்கள். இதை யடுத்து, இதுவரை எந்த தமிழ் நடிகர்களுக்கும் இவ்வளவு உயரத்தில் கட்அவுட் வைத்ததில்லை என்று விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.