Connect with us
Cinemapettai

Cinemapettai

vijayakanth

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோவை தொழிலதிபர் மகளை மணக்கிறார் விஜயகாந்த் மகன்.. எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயகாந்த் பங்கேற்கவில்லை

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன், கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள் கீர்த்தனாவை கரம்பிடிக்கிறார். இருவருக்கும் இனிதே திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்து முடிந்தது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன். கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். இந்நிலையில், கோவை – பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தொழில் அதிபர் இளங்கோவின் மகள் கீர்த்தனா என்ற பெண்ணை கரம் பிடிக்க உள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலமாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயபிரபாகரன் ஆகியோர் நேற்று கோவை வந்தனர். பின் சிங்காநல்லூரில் உள்ள உறவினர் வீட்டில் பெண் பார்த்து பூ வைக்கும் நிகழ்வு நடைபெற்றது .

மிக எளிமையாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சுதீஷ் மட்டும் பங்கேற்ற நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவில்லை.

engagement-picture

engagement-picture

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top