Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாற்றுத் திறனாளிகளை மதிக்கவில்லை என குற்றச்சாட்டு.. விஜய் கொடுத்த பதிலடி
தமிழ் சினிமாவில் அடுத்த வருடத்தில் வெளியாகும் படங்களில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ள படம் தளபதி 64. தளபதி விஜய் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தை கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
டெல்லி, சென்னை என இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் விஜய் தங்கியிருக்கும் ஹோட்டல் முன்பு தினமும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்து அவரை பார்த்து செல்கின்றனர்.

vijay-new
அவரும் ரசிகர்களை மதித்து கையசைத்து விட்டு தான் சொல்கிறார். ஆனால் சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் ஒரு மாற்றுத்திறனாளி பள்ளியில் சமீபத்தில் சூட்டிங் நடைபெற்றது. அங்கே விஜய்யை பார்ப்பதற்காக மாற்றுத்திறனாளி மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து இருக்கின்றனர்.
ஆனால் தளபதி விஜய்யின் காவலர்கள் யாருமே இந்த விஷயத்தை அவரின் காதுக்கு கொண்டு செல்லவில்லை. இதனால் எப்போதும் போல் படப்பிடிப்பு முடிந்து வெளியில் இருக்கும் ரசிகர்களை சந்தித்து விட்டு சென்று விட்டார். ஆனால் அதன் பிறகு அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் காத்திருந்ததாகவும், அவரைப் பார்க்கத் துடிப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் தளபதி விஜய்யின் பார்வைக்கு சென்றது. தற்போது சென்னை வந்தவுடன் உடனடியாக அந்த குழந்தைகளை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என நம்பிக்கையுடன் பதில் அளித்துள்ளார்.
இதனால் அந்த குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிகிறது. மேலும் இதுபோன்ற முக்கிய செய்திகளை விஜய்யிடம் கூறாமலிருக்கும் பாதுகாவலர்களை விஜய் எச்சரித்தால் நல்லது.
மிகப்பெரிய இடத்தில் இருக்கும் விஜய்க்கு இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.
