விஜய் நடித்து 2016ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் தான் தெறி. இதில் விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு முதலியோர் நடித்துள்ளனர். அட்லீ இயக்கிய இத்திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார்.

இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்தார். இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவரின் நாடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இந்த படம் மாபெரும் மெகா ஹிட் ஆனது அனைவரும் அறிந்ததே அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் தெறி உலகம் முழுவதும் சுமார் 150 கோடி வரை வசூல் அள்ளியது, பின்பு இந்த படத்தை ஹிந்தியில் டப் செய்து ஒரு youtube சேனலில் வெளியிட்டுள்ளார்கள்.

Vijay_Theri
Vijay_Theri

அந்த youtube சேனலில் தற்பொழுது வரை 50 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளர்கள் தமிழ்ழில் இருந்து ஹிந்திக்கு டப் செய்யப்பட்டு அதிக ஹிட் கிடைத்த படம் என்றால் அது தெறி தான்.