Tamil Cinema News | சினிமா செய்திகள்
அனைத்து பயிற்சியிலும் கில்லி.. ஹீரோவாக களமிறங்கியிருக்கும் தளபதி விஜய்யின் மகன்
தமிழ்சினிமாவில் வாரிசு நடிகர்களின் படையெடுப்பு அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருந்தும் எல்லோரும் வெற்றி பெற்றார்கள் என்று சொல்ல முடியாது. குறிப்பிட்டவர்கள் தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மற்றவர்கள் வந்த சுவடு கூட தெரியாமல் மறைந்துவிட்டனர்.
இந்நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் தன்னிகரற்ற நாயகனாக உருவெடுத்திருப்பவர் தளபதி விஜய். விடா முயற்சியால் தற்போது விஸ்வரூப வெற்றி பெற்று முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார். அடுத்த படத்தில் தளபதி விஜய்க்கு 100 கோடி சம்பளம் வழங்க உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் மகன் சஞ்சய்க்கு சினிமாவின் மீது ஆர்வம் இருப்பதாக ஏற்கனவே அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து இருக்கின்றனர். அதற்கு ஏற்றார்போல் தற்போது சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து வருகிறார் என்று விஜய்யின் தீவிர ரசிகர் கூறியுள்ளார்.
மேலும் படிப்பு இந்த வருட இறுதியில் முடிவடைய இருக்கும் நிலையில் அடுத்த வருடத்தில் சினிமாவில் சஞ்சய் களமிறங்க அதிகபட்சமாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது எனவும் கூறியுள்ளார். ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது சஞ்சய் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதன் மூலம்தான் உறுதியாகும்.
மேலும் சஞ்சய் சினிமாவுக்காக சண்டை பயிற்சிகள் மற்றும் நடனங்கள் ஆகியவற்றை ஏற்கனவே கற்று வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இருந்தும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் கண்டிப்பாக அவரின் மகனையும் ஆதரிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சமீபத்தில் தளபதி விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி ஷோபா இருவரும் மதுரை சென்ற போது தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவரின் வீட்டில் தான் தங்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
மேலும் இந்த தகவலையும் அவரது தீவிர ரசிகர் தான் தொலைபேசி வாயிலாக ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
