Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் கட்டளை! ஆடிபோன மணிரத்னம்!
மணிரத்னம் தனது அடுத்த பெயரிடப்படாத புதிய படத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது.
மேலும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
‘விக்ரம் வேதா’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதிக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதால், தன்னுடைய கதாபத்திரம் முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், படம் முடியும் வரையில் கதாபாத்திரத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என ஆனித்தனமாக சொல்லி இருக்கிறார் விஜய் சேதுபதி.
ஏற்கனவே பல ஹீரோக்கள் படத்தில் நடிப்பதால் எங்கே நமக்கு புளிப்பு மிட்டாய் கொடுத்து விடுவார்களோ என்ற அச்சம். இதனால் கமர்ஷியல் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களும் இருக்கும் வகையில் உங்கள் கதாபாத்திரம் இருக்கும் என மணிரத்னம் விஜய் சேதுபதிக்கு வாக்கு கொடுத்துள்ளார்.
முன்னதாக, விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டிருந்தாலும், அது சிறிய அளவிலேயே இருக்கும் என்று கூறப்பட்டது. ஏற்கனவே இவரால் நம்ம அர்ஜீன்,கார்த்தி ஆகியோர் பட்ட பாடு நம்ம விஜய் சேதுபதிக்கு தெரியாதா என்ன?
