Tamil Cinema News | சினிமா செய்திகள்
அப்புறம் நக்கிட்டு தான் போகணும்.! மேடையில் அனலை கக்கிய விஜய்சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தனகென்ன ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் வருடத்திற்கு அதிக ஹிட் கொடுப்பவர்களில் இவரும் ஒருவர்.
நடிகர் விஜய் சேதுபதி சினிமாகாரர்கள் என்றாலே மிகவும் கேவலாமாக பார்கிறார்கள் என கூறி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கீ.
இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது,விழாவில் விஷால் ஜீவா என பல நடிகர்கள் கலந்து கொண்டு பேசினார்கள் அதில் விஜய் சேதுபதியும் ஒருவர், விழாவில் பேசிய விஜய் சேதுபதி சினிமாகார்கள் என்றாலே கேவலமாக பார்கிறார்கள்,எதோ தரம் குறைந்து பார்கிறார்கள்.
அதுமட்டும் இல்லாமல் ஏன் கேவலமாக பார்கிறீர்கள் என்றே தெரியவில்லை ஒரு படம் எடுக்க எவ்வளவு கடினம் தெரியுமா,வந்து ஒரு படம் எடுத்து பாருங்கள் அப்பொழுது தான் தெரியும் உங்களுக்கு உயிர் போய் உயிர் வருவது என தனது வருத்தத்தை கூறியுள்ளார்.
மேலும் ஒரு பொருள் இப்படிதான் இருக்கவேண்டும் என தயாரிப்பவர் தான் தயாரிப்பாளர் ஆனால் சினிமாவில் அப்படி இல்லை ஒரு படம் எப்படி இருக்கும் நல்ல இருக்குமா இருக்காதா என எதுவும் தெரியாமல் இயக்குனர் மற்றும் நடிகரை நம்பி படத்தை எடுக்க தயாரிப்பாளர்கள் பணம் கொடுகிறார்கள்.
அந்த நம்பிக்கையை தான் காப்பாற்றுவதற்கு நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். அதேபோல் ஹிட் படம் கொடுத்தால் மட்டுமே ஹீரோ. அதே போல வரிசையா ஒரு நாலு படம் ப்ளாப் ஆச்சுனா அவ்ளோதான். யாரும் திரும்பி கூட பாக்க மாட்டாங்க.
அதுமட்டும் இல்லமால் கண்டுக்க கூட ஆள் இருக்காது.அப்புறம், நக்கிட்டு தான் போகணும்.சினிமாவில் ஒரு நடிகர் படம் ஹிட் ஆனாதான் அவருக்கு மதிப்பு, மரியாதை, பவர் எல்லாமே. நாம கொஞ்சம் சோர்ந்து போனால் கூட அந்த இடத்தை பிடிக்க இன்னொருத்தன் வருவான் இதுதான் உண்மை. ஓடிகொண்டே இருக்க வேண்டும். உழைத்து கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் அனல் பறக்க விஜய் சேதுபதி.
அந்த விழாவில் வல்லவன் படத்தினால் பெரும் நஷ்டத்திற்கு ஆளானதாக தயாரிப்பாளர் தேனப்பன் கூற அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது,பின்பு பேசிய சங்க தலைவர் விஷால் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தால் நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் மைகல் ராயப்பனுக்காக நான் ஒரு படம் முன் பணம் வாங்கமால் நடித்து தருகிறேன் என கூறியுள்ளார் விஷால்.
