தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் 100 கலைஞர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி தலா ஒரு பவுன் தங்கம் வழங்கினார்.

முதல் தங்கத்தை இயக்குனர் சீனு ராமசாமிக்கு விஜய் சேதுபதியின் தாய் வழங்கினார். விழா ஏற்பாடுகளை உலகாயுதா நிறுவனர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், அமீர், கரு.பழனியப்பன் ஆகியோர்  செய்திருந்தனர். இதில் தமிழ் சினிமாவில் தொழிற்சங்கங்களை உருவாக்கிய நிமல் கோஷ் மற்றும் சீனிவாசன் படங்களை முக்தா சீனிவாசன், எடிட்டர் மோகன் திறந்து வைத்தனர்.

 

விழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், எடிட்டர் லெனின், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, நடிகை கஸ்தூரி,நடிகை ரோகிணி, இயக்குனர்கள் விக்ரமன், வி.சேகர், சீனு ராமசாமி, சுசீந்திரன்,பேரரசு, சேரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் கண்ணன், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், நடிகர் ராஜேஷ், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், ஆகியோர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.