fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தன் ரசிகர்களிடம் கோபித்துக்கொண்ட விஜய் சேதுபதி. ஏன் தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தன் ரசிகர்களிடம் கோபித்துக்கொண்ட விஜய் சேதுபதி. ஏன் தெரியுமா ?

இன்று தமிழ் சினிமா என்ற நிலையை தாண்டி சில பல வுட்டுகளிலும் வான்டட் ஹீரோவாகிவிட்டார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரின் நடிப்பிற்கு எந்தளவுக்கு ரசிகர் கூட்டம் உள்ளதோ அதே அளவுக்கு யதார்த்தமான பேச்சு மற்றும் பழக்கவழக்கத்துக்கு எனவும் ரசிகர் வட்டம் உண்டு இவருக்கு.

இவர் நடிக்கும் “துக்ளக் தர்பார்” பட பூஜை வடபழனியில் நடந்தது. சேதுவின் ரசிகர்கள் சாலையில் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளித்தனர். இதுவே விஜய் சேதுபதி வருத்தப்பட காரணம். பின்னர் விழாவில் பேசும் பொழுது அவர் கூறியது …

“இந்த விழாவில் நான் பங்கேற்க வந்தபோது வரவேற்பு அளிப்பதற்காக சாலையில் வாகனங்களை நிறுத்தி பட்டாசுகள் வெடித்தனர். அதை பார்த்து வருத்தப்பட்டேன். பொதுமக்களுக்கு இடையூறு செய்து இதுபோல் பட்டாசுகள் வெடிப்பது எனக்கு பிடிக்காத விஷயம். பட்டாசுகள் வெடித்து ஏன் காசை கரியாக்குகிறீர்கள்?. இதனால் போக்குவரத்து பாதிப்பதோடு சுற்றுப்புறத்திலும் மாசு ஏற்படுகிறது. பட்டாசுகள் வெடிக்க சொன்னவர்களை நான் கண்டிக்கிறேன்.”

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top