ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 9, 2025

இவ்வளவு டேக் என்னால முடியாது, அவசரமாக அதை கற்றுக்கொள்ளும் விஜய்சேதுபதி.. எல்லாம் பணம் படுத்தும் பாடு

நடிகர் விஜய் சேதுபதி சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கப்படுகிறார். ஆனால் அவர் இந்த இடத்தை அவ்வளவு சீக்கிரம் அடைந்துவிடவில்லை. இதற்காக அவர் ரொம்ப அதிகமாக கஷ்டப்பட்டு இருக்கிறார். கோலிவுட்டில் தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி கொண்ட இவர் இப்போது பாலிவுட் வரை சென்று விட்டார்.

விஜய் சேதுபதி ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டதால் தான் என்னவோ இப்போது ‘காற்றுள்ள போதே தூற்றி கொள்’ என முடிவெடுத்து விட்டார் போல. தன்னை தேடி வரும் வாய்ப்புகள் எதையுமே இவர் ஒதுக்குவதில்லை. டாப் ஹீரோவாக முன்னேறி கொண்டிருக்கும் போதே வில்லனாக நடித்தார். ‘ஆரஞ்சு மிட்டாய்’ அறுபது வயது முதியவராக கூட நடித்தார்.

Also Read: டாப் கியர் செட் ஆகாமல் ரூட்டை மாற்றும் நடிகர்.. விஜய் சேதுபதியுடன் போட்டி போட்ட இளம் ஹீரோக்கு ஏற்பட்ட நிலை

இப்படி தன்னுடைய நடிப்பு திறமையை கிடைக்கும் வாய்ப்புகளில் காட்டிவரும் விஜய்சேதுபதிக்கு பாலிவூடில் இருந்து வலை வீச ஆரம்பித்துவிட்டனர். விஜய் சேதுபதி அடுத்தடுத்து ஐந்து பாலிவுட் படங்களில் நடித்து கொண்டிருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே சொல்லியிருக்கிறார். பாலிவுட் அனுபவம் பற்றியும் பகிர்ந்து இருக்கிறார்.

இந்தி வசனங்கள் பேசுவது ரொம்பவே கஷ்டமாக இருப்பதாக கூறியிருக்கிறார். நம்முடைய மூளை தமிழில் தான் வேகமாக யோசிக்கும், ஆனால் யோசிப்பதை கூட இந்தியில் யோசிக்க முயற்சி செய்வதாகவும் சொல்லியிருக்கிறார். ஒரு நாளைக்கு 100 வசனங்களுக்கு மேல் இந்தியில் படிப்பதாக விஜய் சேதுபதி பகிர்ந்து இருக்கிறார்.

Also Read: பெரிய இடத்தை பகைத்துக் கொண்ட விஜய் சேதுபதி.. டிஎஸ்பி படத்தால் வந்த பெரும் தலவலி

விஜய் சேதுபதி, மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த ரோலை இந்தியில் மும்பைக்கார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். மேலும் பாலிவுட் ஹீரோயின் கத்ரினாவுடன் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்திலும், சாகித் கபூருடன் காந்தி டாக் படத்திலும் நடித்து வருகிறாராம். இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடிக்கும் ஜவான் படத்திலும் விஜய் சேதுபதி தான் வில்லன்.

இங்கே கோலிவுட்டில் பல தயாரிப்பு நிறுவனங்களும், இயக்குனர்களும் விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்காக காத்து கிடக்கிறார்கள். ஆனால் அவரோ தெரியாத மொழியை இவ்வளவு கஷ்டப்பட்டு கத்துக் கொண்டிருக்கிறார். பணம் சம்பாதிக்கும் ஆசை தான் இதற்கு எல்லாம் காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

Also Read: நன்றி மறந்த சிவகார்த்திகேயன்.. வாய்ப்பு கொடுத்து கைபிடித்து தூக்கி விடும் விஜய் சேதுபதி

Trending News