விஜய்சேதுபதி படம் என்றால் நம்பி போகலாம் அந்த அளவிற்கு நல்ல கதையை தேர்ந்தெடுத்து நடிப்பவர், விஜய்சேதுபதி அவர்கள் சமுகவளைதலங்களில் எதிலுமே இல்லாதவர் என்று அனைவருக்கும் தெரியும். 

சமூக வலைதளங்கள் எதிலும் இல்லாத விஜய் சேதுபதி, முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். ஆர்குட், பேஸ்புக், டுவிட்டர் என்று ஏகப்பட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்தபடியே உள்ளது.

அதிலும், டுவிட்டரைத்தான் நடிகர், நடிகைகள் அதிகம் பயன்படுத்துகின்றனர். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இன்ஸ்டாகிராமின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல பிரபலங்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும் இன்ஸ்டாவில் இணைந்துள்ளார்.

ஆனால், அவருக்கு பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அக்கவுண்ட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.விஜய்சேதுபதி நடித்த விக்ரம்வேத திரையில் பல சாதனைகள் படைத்தது குறுப்பிடத்தக்கது.