Tamil Cinema News | சினிமா செய்திகள்
வசூலில் ரஜினியை தாண்டும் விஜய்.! புள்ளி விவரத்துடன் கூறும் வினியோகிஸ்தர்.!

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று அனைவரும் அறிவார்கள் அவரின் படம் மட்டும் எப்பொழுதும் அதிக வசூல் செய்து வந்தது.
ரஜினியின் கபாலி படம் தான் தமிழ் சினிமா துறையில் அதிக வசூல் சேர்த்தபடம் என்று கூறினார்கள். ஆனால் தற்பொழுது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
திருப்பூர் விநியோகஸ்தர் சுப்ரமணியம் உண்மையை உடைத்துள்ளார் அவர் கூரியதாவது கோயம்பத்தூரில் விஜய் நடித்த மெர்சல் படத்தை நான்தான் வாங்கி வெளியிட்டேன் படத்தின் ஷேர் மட்டுமே எனக்கு 12 கோடி கிடைத்தது.
அதுமட்டும் இல்லாமல் ரஜினி நடித்த கபாலி கூட 7 கோடி ஷேர் தான் கிடைத்தது எனக்கு,மேலும் ரஜினி நடித்த இந்திரன் படமும் கோயம்பத்தூரில் 10 கோடி வரை ஷேர் கிடைத்தது.
ஆனால் இந்த வசூலை விஜய் நடித்த மெர்சல் படம் முறியடித்துள்ளது மெர்சல் ஒருபொழுதும் தோல்விப்படம் கிடையாது மிகப்பெரிய வெற்றி படம் தான் என கூறியுள்ளார் திருப்பூர் விநியோகஸ்தர் சுப்ரமணியம்.
