fbpx
Connect with us

Cinemapettai

20 வருஷமாக விஜய்க்கு இருந்த அன்பு தொல்லை.. அதிர்ச்சிக்குள்ளாக்கிய தளபதி.. மேனேஜர் பதிவு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

20 வருஷமாக விஜய்க்கு இருந்த அன்பு தொல்லை.. அதிர்ச்சிக்குள்ளாக்கிய தளபதி.. மேனேஜர் பதிவு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கதாநாயகனாக வலம் வருவது தளபதி விஜய். மேலும் தனது ரசிகர்களுக்கு அண்ணன் என்ற பரிமாணத்தில் தெரிவதால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளங்கள் உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் கூட தளபதி விஜய்யின் பாடல்கள் மற்றும் வசனங்களைக் கேட்டு கேரளாவில் ஒரு மாணவன் குணமடைவதாக செய்திகள் வெளிவந்தன. அதேபோல் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் பார்வையற்ற தம்பதிகள் தளபதி விஜய்யை 20 வருடமாக பார்க்க முயற்சிப்பதாக தங்களது கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனை அறிந்த தளபதி விஜய் அந்த தம்பதியினரை அழைத்து சந்தித்ததாக தளபதி விஜய்யின் மேனேஜர் ஜெகதீஸ் என்பவர் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதேபோல் உடல் ஊனமுற்றவர்கள் நிறைய பேர் தளபதி விஜய்யை ரசித்து வருவது சமீபகாலமாக அனைவருக்கும் தெரிந்து வருகிறது. என்னதான் நடிகராக இருந்தாலும் உண்மையாகவே இது போன்ற ரசிகர்கள் கிடைப்பதற்காக அவர்கள் தவம் செய்திருக்க வேண்டும்.

https://twitter.com/TamilCensor/status/1213835514769530881?s=20

இதனை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top