Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல டிவியில் ஒளிபரப்பப்படும் மெர்சல்.! எப்பொழுது தெரியுமா?
மெர்சல் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து அசத்திய படம் மெர்சல் இந்த படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. 2017-ல் தமிழில் வெளிவந்த படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை சேர்த்துள்ளது விஜய்யின் மெர்சல்.
கடந்த வருடத்தில் திரைக்கு வந்த பாகுபலி-2 தான் வசூலில் அதிகம் என்றாலும், இது தமிழில் டப் செய்யப்பட்டுதான் ரிலீஸ் செய்தார்கள் ஆனால் ஒரு நேரடி தமிழ் படத்தில், மெர்சல் தான் கடந்த வருடத்தில் வசூலில் அதிகம் .
இந்த படத்தின் அபார வெற்றிக்கு படத்தில் உள்ள சர்ச்சை கருத்துகளும் ஒரு காரணம், இந்த சர்ச்சை கருத்தானது உலகத்தில் உள்ள அனைவரையும் திரும்பி பார்க்கவைத்தது.
மெர்சல் படம் சுமார் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது,படம் வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன,ஆனாலும் இந்த படத்தை பற்றி இன்னும் ரசிகர்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
படத்தின் சேட்லைட் உரிமையாயை பிரபல தொலைக்காட்சியான zee tamil வாங்கியுள்ளது, அதனால் இந்த படத்தை பொங்கலுக்கு அதாவது வருகிற 14 ஆம் தேதி ஒளிபரப்ப போகிறார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.
ஏன் என்றால் இன்னும் மெர்சல் படம் திரைக்கு வந்து 100 நாட்கள் கூட ஆகவில்லை அதற்குல் தொலைகாட்சியில் ஒளிபரப்புவதால் தான், விஜய் ரசிகர்கள் 100 நாள் கொண்டாட்டதிற்கு பிறகு ஒளிபரப்புங்கள் என கோரிக்கையும் வைத்தார்கள் ஆனால் இவர்களின் கோரிக்கை zee tamil தொலைகாட்சிக்கு கேட்கவில்லை.
அவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை தற்பொழுது அறிவித்துள்ளார்கள்.
தளபதி விஜய் நடிப்பில், நாட்டின் சமூக கருத்துக்களுடன், காதல், நகைச்சுவை, சாகசங்கள் அடங்கிய மெகா ஹிட் திரைப்படம் “மெர்சல்” பொங்கல் தின சிறப்பு திரைப்படம், ஜனவரி 14 மாலை 04:00 மணிக்கு என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
