இளைய தளபதி விஜய்க்கு பெண் ரசிகைகள் அதிகம். இவர் ஆரம்ப காலத்தில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, லவ் டுடே, குஷி என பல காதல் படங்களில் நடித்துள்ளார்.இவர் உண்மையாகவே காதலில் விழுந்தது எப்படி தெரியுமா?

பூவே உனக்காக படத்தை பார்த்த பிறகு சங்கீதா லண்டனிலிருந்து சென்னை கிளம்பி வந்து, விஜய்யை பார்த்தே ஆக வேண்டும் என்று கூறினாராம். பிறகு ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து சந்தித்துள்ளார். அப்போது விஜய்யின் தந்தை தான் “விஜய்யை நீ திருமணம் செய்துக்கொள்கிறாயா?” என கேட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  வரும் 14 ந் தேதி விஜய் வீட்டின் முன் போராட்டம்? விஜய் 60வது படத்தால் வந்த சோதனை

தீவிர விஜய் ரசிகரான சங்கீதா இதற்கு மறுப்பு தெரிவிப்பாரா, அவர் ஓகே சொன்னாராம், ஆனால், விஜய்க்கும் சங்கீதாவை பார்த்தவுடன் பிடித்துவிட்டதாம், அதை எப்படி பெற்றோர்களிடம் சொல்வது என்று யோசிக்க, பெற்றோர்களே இதை புரிந்துக்கொள்ள விஜய் மிகவும் சந்தோஷப்பட்டாராம், இதை ஒரு பேட்டியில் விஜய்யின் அம்மா ஷோபோ அவர்களே கூறியுள்ளார்.