fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ரசிகர்களுக்காக புதிய உத்தியை கையிலெடுத்த தளபதி விஜய்.. காரணத்த கேட்டு ஷாக்கான கோலிவுட்!

vijay-thalapathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரசிகர்களுக்காக புதிய உத்தியை கையிலெடுத்த தளபதி விஜய்.. காரணத்த கேட்டு ஷாக்கான கோலிவுட்!

தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்திலுள்ள ரசிகர் பட்டாளத்தை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை.

தற்போது உள்ள டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இதனால் பல முக்கிய பிரபலங்கள் தங்களது பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை தொடங்கி நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய்யும் புதிதாக யூடியூப் சேனல் தொடங்க இருக்கிறார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் புதியதாக ஒரு யூடியூப் சேனலை விஜய் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இணையத்தில் வெளிவந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் இனிமேல் விஜய் தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் அந்த சேனலில் தான் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளரான புஸ்ஸி ஆனந்த் இந்த யூடியூப் சேனல் தொடங்குவது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

Vijay-YouTube-channel

Vijay-YouTube-channel

அதேபோல், விஜய் மக்கள் இயக்கத்தின் நற்பணிகளும் கூட அந்த யூடியூப் சேனல் தான் வெளியிடப் போவதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்,

எனவே தளபதி விஜய் ஆரம்பிக்கப் போகும் யூடியூப் சேனலை பற்றிய  தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top