Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 64-ல் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி போட்ட முதல் கண்டிஷன் தெரியுமா? அதிர்ச்சியான படக்குழு
தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவர இருக்கிறது. படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உலகம் முழுவதும் ஹிட் அடித்துள்ளது. பிகில் திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னரே தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் விஜய்.
மாநகரம் கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது. வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்தனர்.
விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார். பெரிய ஹீரோக்களுக்கு தொடர்ந்து அவரை வில்லனாக கேட்பதால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தங்கியுள்ளார். மேலும் விஜய்க்கு வில்லனாக நடிக்க வேண்டுமென்றால் சம்பளத்தை இரட்டிப்பாக்கி தரவேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்.
அதற்கும் சம்மதம் தெரிவித்தது படக்குழு. இதனால் வர்ர லட்சுமியை விட வேண்டாம் என்று இழுத்து பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். தளபதி 64 படத்தில் விஜய் சேதுபதிக்கு சுமார் 10 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொழைக்க தெரிஞ்ச புள்ள.!
