Tamil Cinema News | சினிமா செய்திகள்
அன்று எம்ஜிஆர்.. இன்று விஜய்.. விஸ்வரூபம் எடுக்கும் தளபதி
தளபதி விஜய் தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக உருவாகி கொண்டிருக்கிறார். எக்கச்சக்க ரசிகர் பட்டாளங்கள் உடன் குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார். தளபதி விஜய் படத்தில் ஏதாவது கருத்து இருக்கும் என்று நம்பியே இன்றுவரை கோடான கோடி ரசிகர்கள் அவரது திரைப்படங்களை குடும்பத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் பெரிய அளவில் வசூலை குவித்து வெற்றி பெற்றது. இதனால் விஜய் மற்றும் பட தயாரிப்பாளர் மீது வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அமைதியாக நடக்க வேண்டிய வருமான வரி சோதனையை வேண்டுமென்றே விஜய்யின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரை வீட்டிற்கு அழைத்து வந்து மிகவும் கடுமையான முறையில் நடந்துகொண்டனர். இதற்கு தளபதி விஜய் ரசிகர்கள் பெரும் கண்டனம் தெரிவித்தனர்.
வருமானவரி சோதனையில் விஜய் வீட்டில் இருந்து எதுவும் கைப்பற்ற முடியவில்லை என வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டது. ஏதோ கட்சியின் சூழ்ச்சியால் தான் விஜய் வீட்டில் சோதனை திடீரென அரங்கேறியது என யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் விஜய் வீட்டில் எதுவும் கிடைக்காத பின்னர் நேரடியாக மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து வரும் நெய்வேலியில் திடீரென ஒரு கட்சியினர் போராட்டத்தில் குதித்தனர்.
அப்போதே தெரிந்து விட்டது இது அரசியல் சூழ்ச்சி தான் என்று. தளபதி விஜய் மத்தியில் ஆளும் அரசின் திட்டங்கள் அனைத்தும் எளிய மக்களுக்கு பயன்தராது என அவ்வப்போது தனது கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனாலேயே அவரின் மீது ஒரு குறிப்பிட்ட கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மெர்சல் சர்கார் படங்களின் போது அவர்களின் கோபம் வெளிப்படையாகத் தெரிய வந்தது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது எம்ஜிஆருக்கு ஒரு காலத்தில் நடந்தது தான் தற்போது தளபதி விஜய்க்கு நடந்து கொண்டிருக்கிறது என பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். தளபதி விஜய்யை போலவே எம்ஜிஆர் உடைய காலகட்டங்களில் எம்ஜிஆர் படங்கள் பெரிய அளவு வசூல் செய்து வந்தன.
அப்போதும் இதே போல்தான் கட்சியினர் எம்ஜிஆரின் மீது வருமான வரி சோதனையை அடிக்கடி ஏற்படுத்தி வந்தனர். அந்த நெருக்கடியில் தான் திடீரென எம்ஜிஆர் அரசியலுக்குள் நுழைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. அது அப்படியே அச்சு பிசகாமல் தற்போது தளபதி விஜய் வாழ்க்கையில் நடந்து வருகிறது. அவருக்கு மேலும் மேலும் அழுத்தத்தை கொடுப்பதனால் விளைவு எதிர்ப்பவர்களுக்கு தான் என பிரபல பத்திரிக்கையாளர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
