Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் போட்ட ஒரே ட்வீட்.. அதிரும் சமூக வலைதளம்
இன்னும் பிகில் பட ரிலீஸுக்கு ஒரே ஒரு நாள்தான் உள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் திருவிழாவைப் போல் களைகட்டி வருகிறது. தமிழ்நாடு மட்டுமன்றி கேரளாவிலும் தளபதி விஜய்யின் ரசிகர்கள் தாறுமாறாக பட வெளியீட்டை கொண்டாடி வருகின்றனர்.
சமீபகாலமாக பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு டிவிட்டரில் எமோஜி என்ற ஒரு சின்னம் அடையாளமாக குறிப்பிட்ட நாட்கள் வரை இடம்பெறும். இதுவரை 4 தமிழ் படங்களுக்கு மட்டுமே இந்த எமோஜி கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் இரண்டு விஜய் படங்கள் ஆகும். தற்போது ட்விட்டர் பக்கத்தில் நேரலை காட்சியில் பிகில் படத்தின் எமோஜி வெளியிடப்பட்டது. வழக்கம்போல விஜய் ரசிகர்கள் ட்விட்டரை அதகளம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து நான்கு வகையான டிவிட்டர் ஹேர் ஸ்டைலை உருவாக்கி அதனை தொடர்ந்து முதல் நான்கு இடங்களிலும் இடம்பெறச் செய்துள்ளனர். இந்நிலையில் தளபதி விஜய் நேரடியாக ட்விட்டரில் #Bigil என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார்.
இதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
— Vijay (@actorvijay) October 23, 2019
