மெர்சல் படத்தின் வெற்றியை கொண்டாட அப்படக்குழுவினருக்கு, தளபதி விஜய் ஒரு ஸ்பெஷலான பார்ட்டி கொடுத்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பல்வேறு தடைகளை உடைத்து வெளியான படம் மெர்சல். இந்த படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் அளித்த விளம்பரத்தைவிட , அரசியல் கட்சிகளால் கிடைத்த விளம்பரமே அதிகம் எனலாம்.

mersal

இப்படம் அஜித்தின் வேதாளம், விவேகம் படங்கள் நிகழ்த்திய சாதனைகளை கடந்து சென்றது என்ற தகவல்கள் வெளியாகின. தவிர, இந்த ஆண்டில் வெளியான பாகுபலி -2 படத்துக்கு பின் உலக அளவில் அதிக வசூல் செய்த படம் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படக்குழுவினருக்கு தளபதி விஜய் ஒரு ஸ்பெஷலான பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் இயக்குனர் அட்லீ, எஸ்.ஜே.சூர்யா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில்

விஜய் விருந்து கொடுத்த நாளை என்ன ஒரு மறக்க முடியாத ஒரு நாள் என்று பாடலாசிரியர் விவேக் பூரித்துப் போய்ச் சொல்லியிருக்கிறார்.

mersal

கவிஞர் விவேக் எழுதிய ‘ஆளப்போறான் தமிழன்’ உட்பட அனைத்து பாடல்களும் மெர்சலில் பெரிய ஹிட் ஆனது. பட வெற்றியை கொண்டாடும் வகையில் விஜய் படக்குழுவை சேர்ந்த அனைவரையும் அழைத்து வீட்டில் விருந்து கொடுத்தார்.

அந்த விருந்தில் ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்.ஜே.சூர்யா, அட்லீ, விஜய் என பலரும் கலந்து கொண்டனர். இந்த விருந்து குறித்து ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் விவேக், “ மறக்கவே முடியாத என்ன ஒரு நாள்” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

மேலும் “இசைப்புயல் மற்றும் தளபதி கொடுத்த அளவுகடந்த அன்புதான் இந்த வாய்ப்பு. அதற்காக நன்றி விஜய் சார் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விருந்தில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை என் வாழ்கையின் பொக்கிஷமாக்க போகிறேன் என்று கூறியுள்ளார் விவேக்.