fbpx
Connect with us

Cinemapettai

தளபதி விஜய்க்கு நான்தான் ஐடியா கொடுத்தேன்.. மைக் மோகன் சொன்ன சூப்பர் தகவல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தளபதி விஜய்க்கு நான்தான் ஐடியா கொடுத்தேன்.. மைக் மோகன் சொன்ன சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு மிகப்பெரிய டப் கொடுத்தவர் தான் நடிகர் மைக் மோகன். அன்றைய காலகட்டங்களில் அவரது படத்துக்கு என்றே ஒரு கூட்டம் எழுந்துள்ளது. தொடர்ந்து மோகன் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியைப் பெற்று வந்தது.

பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் வெற்றியில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை, அவரது சினிமா பயணம் முடியும் வரை கிட்டத்தட்ட 80 சதவீத படங்கள் வெற்றியை மட்டுமே ருசித்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 42 வருடங்கள் தமிழ் சினிமாவில் பூர்த்தி செய்த மோகன் ஃபேன்ஸ் மீட் என்பது ஏற்பாடு செய்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் நடிகர் விஜய்க்கு நான் தான் உதவி செய்தேன் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியது என்னவென்றால், நான் நடிக்கும் காலகட்டங்களில் என்னுடைய காஸ்ட்யூம்கள் அதிகம் பேசப்பட்டு வந்தன. அதற்கு காரணம் ராஜேந்திரன் என்ற என்னுடைய காஸ்ட்யூம் டிசைனர் தான் எனவும் தெரிவித்தார்.

மேலும் நடிகர் விஜய் தன்னிடம் நான் காஸ்ட்யூம் டிசைன் பற்றி ஐடியா கேட்டதாகவும், தற்போது தளபதி விஜய்க்கு ராஜேந்திரன் தான் காஸ்ட்யூம் டிசைனராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ராஜேந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அழைத்து வர முடியவில்லை, குணமடைந்ததும் அழைத்து வருகிறேன் எனவும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.

புகழின் உச்சியில் இருந்த மோகன் திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனதற்கு அந்த காலத்து நடிகை ஒருவர் தான் காரணம் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top