எம்ஜிஆர் பாணியில் அரசியல் செய்ய போகும் விஜய்.. இரண்டு நடிகைகளுக்கு வீசும் வலை

நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கிறார். சமீப காலமாக இவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லி வருகின்றனர். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் கல்லாகட்டி வருகின்றன. விஜய்க்கு சினிமாவில் அத்தனை பேர், புகழ் வந்த பின் அரசியலிலும் களமிறங்கி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதற்காக அவர் பல திட்டங்களையும் வகுத்து வருகிறார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பிக்கும் பொழுதே அவர் அரசியலில் இறங்கப் போவது உறுதியான ஒன்றுதான். இருந்தாலும் இதற்கு முன் அரசியலுக்கு வந்த நடிகர்களின் கசப்பான அனுபவங்களை கருத்தில் கொண்டு விஜய் இன்று வரைக்கும் அரசியலில் ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார். எப்படியும் 2026 தேர்தலில் விஜய் களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை கண்டது மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டும் தான். எம்ஜிஆர் முதன் முதலில் கட்சி ஆரம்பிக்கும் பொழுது அவருடன் ஜோடி சேர்ந்த நடிகைகளை கட்சிக்குள் கொண்டு வந்தார். எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது அதில் மூன்றாவதாக உறுப்பினராக சேர்ந்ததே அப்போது பிரபலமாக இருந்த நடிகை லதா தான். அதேபோன்று முன்னாள் முதலமைச்சர் மற்றும் நடிகையான ஜெயலலிதாவை உள்ளே கொண்டு வந்து அவருடைய சினிமா பிரபலம் மூலம் கட்சியை மக்களிடையே கொண்டு சென்றார் எம் ஜி ஆர்.

இந்த திட்டத்தை தான் தற்போது தளபதி விஜய்யும் செயல்படுத்த இருக்கிறார். கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷாவை அவருடன் ஜோடி சேர்த்ததே அரசியல் திட்டத்திற்காக தான் என்று சொல்கிறார்கள். இருந்தாலும் விஜய்க்கு இன்னொரு பிளானும் இருக்கிறது. அடுத்து அவர் நடிக்க இருக்கும் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு வாய்ப்பு வழங்க இருக்கிறார்.

நயன்தாராவிற்கு தமிழகத்தில் ரசிகர்கள் கூட்டம் என்று தனியாக உண்டு. ஆரம்ப காலங்களில் இவருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும் தற்போது பெண்களும் அதிகமாக நயன்தாராவை ஆதரிக்கிறார்கள். இதனால் தன்னுடைய அரசியல் திட்டத்திற்கு நயன்தாராவை கட்சிக்குள் கொண்டு வரும் எண்ணம் தளபதி விஜய்க்கு இருக்கிறது.

மேலும் நயன்தாரா மற்றும் திரிஷா இருவரையுமே தளபதி விஜய் தன்னுடைய அரசியல் பணிக்கு பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் தொடங்கும் பொழுது அந்தக் கட்சி கொடியை அறிமுகப்படுத்தியவர் நடிகை நயன்தாரா தான். நயன்தாராவை வைத்து அரசியலில் திட்டம் போடும் பிளான் அப்போதே விஜய்க்கு இருந்திருக்கிறது என்பது நன்றாக தெரிகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →