‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் கிருத்திகா உதயநிதி இயக்கிவரும் படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் இப் படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

vijay antony

இந்தப் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாது, இசை அமைத்து, படத்தைத் தயாரிப்பதும் விஜய் ஆண்டனி தான். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு .லாரன்ஸ் கிஷோர் எடிட்டர். இந்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர் படக்குழு.

கிருத்திகா உதயநிதி இந்தப் படத்தை முற்றிலும் ஒரு கமர்ஷியல் படமாகத்தான் உருவாக்கி உள்ளாராம். போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் துடங்கி விட்டதாம்.

அதனால் இந்த படம் முடிந்து விட்டதால் விஜய் ஆண்டனி அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த படத்தின் டைட்டில் திமிரு புடிச்சவன் என அறிவித்துள்ளார்கள் இந்த படத்தை விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க இருக்கிறது மேலும் இந்த படத்தை கணேஷா இயக்க இருக்கிறார்.

இந்த படத்தின் பட பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் 7 ம் தேதி தொடங்க இருக்கிறது.