நாக்கமுக்க புகழ் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நான் படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால் சலீம், இந்தியா பாகிஸ்தான் என அடுத்தடுத்து நடித்தவர், அடுத்தப்படியாக பிச்சைக்காரனில் நடித்தார். அப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. அதற்கடுத்து சைத்தான் படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படி நடித்த நான்கு படங்களையும் தானே தயாரித்து நடித்தார் விஜய் ஆண்டனி.

ஆனால் அடுத்து நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கத்தில் அவர், நடிக்கப்போகும் யமன் படத்தை கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அதனால் விஜய் ஆண்டனியின் முந்தைய படங்களை விட மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறதாம். அதோடு, ஏற்கனவே ஆக்சன் கதைகளில் நடித்துள்ள அவர், இந்த படத்தில் மெகா ஹீரோக்கள் ரேஞ்சுக்கு பிரமாண்ட சண்டை காட்சிகளிலும் நடிக்கிறாராம்.

அதிகம் படித்தவை:  பிச்சைகாரன் முதல் வார பிரம்மாண்ட வசூல் வெளியானது !

இம்மாதம் 15-க்கு பிறகு யமன் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், தற்போது பாடல் கம்போஸிங் வேலைகளில் ஈடுபட்டுள்ள விஜய் ஆண்டனி, மெகா ஹிட் பாடல்களை கொடுத்து விட வேண்டும் என்பதற்காக ஏராளமான டியூன்களை ரெடி பண்ணி அதிலிருந்து நல்ல டியூன்களாக ஓகே பண்ணிக்கொண்டிருக்கிறார். அதோடு, நாக்குமுக்க பாணியில் இந்த படத்திலும் ஒரு அதிரடியான டியூன் இடம்பெறுகிறதாம்.