சேட்டையை ஆரம்பித்த குட்டி பகவதி.. தூக்கத்தை தொலைத்த தளபதி

Thalapathy Vijay: பகவதி படத்தில் நடிகர் விஜய் பெரிய டானா மாறிடுவாரு. அவர் கூட இருந்த வடிவேலுவும் தன்னை டான் மாதிரி காட்டிக் கொள்வார். அதுல ஒரு சீன்ல நான் தான் குட்டி பகவதின்னு சொல்லுவாரு. ஏண்டா பகவதி யாருனே எங்களுக்கு தெரியாது, அது என்ன குட்டி பகவதின்னு சொல்லி அவரை போட்டு பொளந்துருவாங்க.

அந்த சீண்ட வடிவேலு அடி வாங்குறது இல்லாம, பெரிய டான் மாதிரி வந்துட்டு இருக்க விஜய்யையும் அசிங்கப்படுத்திடுவாரு. இந்த மாதிரி ஒரு காட்சி தான் இப்போ விஜய் ஓட சொந்த வாழ்க்கையிலும் நடந்துடுச்சு.

தளபதி அரசியல் கட்சி ஆரம்பித்து இருப்பது எல்லாராலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அட நடிகர்கள்னா அடுத்த அரசியலுக்கு வருவதற்கு தான் தயாராக இருப்பாங்கன்னு ஒரு பக்கம் நக்கல் பேச்சும் இருக்கு.

இதைத்தாண்டி விஜய் அரசியலில் முக்கிய இடத்தை பெறுவாரா என்ற சந்தேகம் அவருடைய ரசிகர்களுக்கே இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடிகர் விஷால் செய்திருக்கும் ஒரு விஷயம் தலையில் அடித்துக் கொள்ளும் அளவுக்கு இருக்கிறது.

விஷால் ஏற்கனவே ஆந்திர அரசியலில் களமிறங்குவது போல் பாசாங்கு காட்டிவிட்டு ஒன்னும் தெரியாதது போல் ஒதுங்கிக் கொண்டது எல்லாருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது தமிழக அரசியலில் களமிறங்க இருப்பதாக நேற்று அறிவித்திருக்கிறார்.

அதிலும் கட்சி ஆரம்பிப்பதோடு 2026 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடப் போகிறாராம். அதிலும் அந்த சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குகள் றுவதற்கு வழிவகை செய்வாராம். சரி, விஷால் கட்சி ஆரம்பிச்சதுக்கு, விஜய் ஏன் தூக்கம் இல்லாமல் இருக்கணும்னு எல்லாருக்கும் ஒரு கேள்வி வரும்.

விஜய் சீரியஸா ஒரு விஷயத்தை பண்ணிட்டு இருக்கும்போது, அதே பீல்டில் இருக்கும் இன்னொருவர் நானும் கட்சி ஆரம்பிக்கிறேன் அப்படின்னு அறிவிப்பு கொடுக்கிறார். இப்ப விஜய் ஓட அரசியல் நகர்வை சீரியஸா பார்த்துட்டு இருக்க எல்லாரும், விஷால் ஓட அரசியல் அறிவிப்பை ஒப்பிட்டு பேசுவாங்க.

ஆமா இந்த நடிகர்களுக்கு இதுதான் வேலை விஜய், விஷால் அண்ணன் ஒரு ஒருத்தரா உள்ள வந்துட்டே தான் இருப்பார்கள் என்று பொத்தாம் பொதுவா பேசி முடிச்சிடுவாங்க. விஜய் காலம் இறங்க இருக்கும் தீவிர அரசியலை நையாண்டியாக மாற்றும் வகையில் விஷால் இந்த விஷயத்தை செய்திருக்கிறார்.

ஆழ்வார்பேட்டை ஆண்டவா பாட்டுல கமல் ஒரு வார்த்தை சொல்லுவாரு டாவு கட்டி தோத்துப்போனவன் எல்லாம் கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா. காதலிச்சு தோத்து போனவன் எல்லாம் செத்துப் போயிட்டா யாருடா ஓட்டு போடுவாங்க என்றது தான் அதோட அர்த்தம்.

இப்போ நாட்டுல நிலைமை சரியில்லன்னு வீட்டுக்கு ஒருத்தன் கட்சி ஆரம்பிச்சிட்டா அப்போ ஓட்டு யாரு தான் போடுவது என்று தான் இப்ப நம்ம கேட்கணும். அரசியலை மாத்தணும்னா கட்சி தான் ஆரம்பிக்கணும்னு ஒன்னும் இல்ல.

நம்ம கையில் இருக்கும் ஓட்டு எல்லாத்தையும் முடிவு பண்ணிடும். எல்லோரும் மனசு மாறனாலே நாட்டோட நிலைமை மாறிடும். சந்தானம் ஒரு காமெடியில் இந்த காது குடையிற பட்ஸ் ஏன் அங்கே இங்கே ஓடிட்டு இருக்கான்னு மனோபாலாவ சொல்லுவாரு. அப்படித்தான் இருக்குது இப்போ விஷால் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்