fbpx
Connect with us

Cinemapettai

டபுள் மீனிங்க் காமெடியின் தந்தை வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை.. இவரா அது!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டபுள் மீனிங்க் காமெடியின் தந்தை வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை.. இவரா அது!

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் சில நகைச்சுவை நடிகர்களில் முக்கியமான பங்கு வெண்ணிற ஆடை மூர்த்தி அவர்களுக்கு உண்டு. என்னதான் இந்த காலத்தில் டபுள் மீனிங், ஆபாச வார்த்தைகள் என கூறிக்கொண்டாலும் அதை டபுள் மீனிங் வசனம் என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறமையாக பேசக்கூடியவர் இவர்.

1936 ஆம் ஆண்டு பிறந்த இவர், டைரக்டர் ஸ்ரீதரின் நட்பினால் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்புவரை மூர்த்தியாக இருந்த இவர், அதன்பிறகு அனைவராலும் வெண்ணிறாடை மூர்த்தி என அழைக்கப்பட்டார்.

அடிப்படையில் இவர் ஒரு வக்கீல். ஆனால் சினிமாவின் மீதுள்ள மோகத்தால் அதை விட்டுவிட்டு நடிக்க வந்துவிட்டார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் இவரை அடிச்சுக்க ஆளில்லை. அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிப்பை அப்படியே அள்ளி சாப்பிட்டு விடுவார்.

வயது வந்தவர்களுக்கு மட்டுமே இவரது காமெடியை புரிந்து கொள்ளும் திறன் உள்ளது. சமீபத்தில் 83வது பிறந்த நாளை கொண்டாடிய வெண்ணிற ஆடை மூர்த்தியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. அதனை கண்ட ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.

நம்ம வெண்ணிற ஆடை மூர்த்தி இது! என ஆச்சரியத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். வயதாகிவிட்டதால் நடிப்பதற்கு உடல் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் தற்போது முழுவதும் ஓய்வில் உள்ளார்.

காலம் கடந்தும் இவரது கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் உயர்ந்து நிற்கும்.

vennira-aadai-moorthi

vennira-aadai-moorthi

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top