Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமல் பற்றி வடிவேலு சொன்ன ரகசியம்.. 28 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த உண்மை
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மறைவிற்கு பிறகு தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற கலைஞனாக இருப்பவர் நடிகர் கமலஹாசன். எந்த வகை கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்கு உயிரூட்டி வெளிப்படுத்துபவர். சினிமாவை மட்டுமன்றி தன்னைச் சார்ந்தவர்களையும் உயிரை கொடுத்து காப்பாற்றும் பண்புடையவர்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு அவர்களின் சினிமா வாழ்க்கையில் கமலஹாசனின் பங்கு எத்தகைய சிறப்பு மிக்கது என்பதை அவரின் சமீபத்திய நாளிதழ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சிங்காரவேலன் படப்பிடிப்பில் கமல்ஹாசனின் நண்பர்களில் ஒருவராக நடித்து கொண்டிருக்கும் போது தன்னை தனியாக அழைத்துச் சென்று தன் திறமையை அளவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதன் பிறகு கமல் சார், ஆபிசில் உள்ள டி.என்.எஸ் என்பவரை நாளை காலை சென்று பார்க்குமாறு கூறியிருந்தார். பொறுமை தாங்க முடியாத நான் அன்று மாலையே அவருடைய ஆபீஸுக்கு சென்று விட்டேன். அங்கு ஒரு கவர் கொடுத்தனர். ஆர்வத்துடன் பிரித்து பார்த்தது ரூபாய் 5000-கான காசோலை ஒன்றை கொடுத்து தேவர் மகன் படத்தில் இசக்கி கேரக்டருக்கு நீ தான் பொருத்தமான ஆள் என்று கமல் சொன்னதாக புன்னகை மலர கூறினார்.
அந்த படத்தின் பிரிவியூ ஷோ வின் போது நடிகர் சிவாஜி கணேசன், தனது நடிப்பை பார்த்து இவன் பெரிய ஆளாக வருவான் என கமலிடம் தெரிவித்தார். அருகில் இருந்த நான் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றேன். அவ்வளவு பெரிய நடிகர் என்னை புகழ்ந்து பேசியது தான் இன்று தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த கலைஞனாக உருவாக்கியது என்றும் மனதார கூறினார்.
உண்மையிலேயே உடல் மொழியால் மக்களை சிரிக்க வைத்த ஒரே கலைஞன் இவரே. மீண்டும் இவரை தமிழ் சினிமாவில் பார்க்க அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
