Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித் படத்தில் வெறித்தனமாக இணைந்த பிரபல காமெடியன்.. வலிமை சூப்பர் அப்டேட்
தல அஜித் இந்த ஆண்டு இரண்டு பெரிய வெற்றிகளை கொடுத்து விட்டு வலிமை படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். தற்போது தல அஜித் வலிமை படத்திற்காக உடல் எடையைக் குறைத்து கொண்டிருக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் கருங்கூந்தலில் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். தற்போது வலிமை படத்தில் காமெடியனாக நடிகர் வடிவேலு இணைய இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
தல அஜித் மற்றும் வடிவேலு ஆகியோர் 17 வருடங்களுக்கு முன்பு ராஜா எனும் திரைப்படத்தில் நடித்தனர். அதன்பிறகு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தொடர்ந்து இணையாமல் இருந்தனர்.
தற்போது கதைக்கு வடிவேலு இருந்தால் சிறப்பாக இருக்கும் என உணர்ந்த வினோத், அதனை தல அஜித் இடம் கூற, அவரோ சரி என தலையாட்டி விட்டதாக தெரிகிறது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
அதேபோல் கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
