தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான ரசிகர்களுக்கு சொந்தக்காரர் தல அஜித். இவருடைய ஒவ்வொரு படங்களையும் அவருடைய ரசிகர்கள் விழாக் கோலம் போல் திரையரங்கில் கொண்டாடுவது உண்டு. அந்த வகை தற்போது அஜித் ரசிகர்களால் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் படம் வலிமை.
இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்ட் ஆனது. அதிலும் இந்த வீடியோவில் அஜித் பைக் ரேசிங் செய்யும்போது தவறி விழுந்து, அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மீண்டும் அதே பைக்கில் ஏறி பைக் ரேசிங் செய்தது ரசிகர்களால் வியந்து பார்க்கப்பட்டது.
எனவே கூடிய விரைவில் திரையிடப்பட உள்ள வலிமை படத்தின் எதிர்பார்ப்பு தற்போது தல அஜித் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் வலிமை படத்திற்குப் பிறகு இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட தல அஜித் ரசிகர்களுடன் பல புகைப்படத்தை எடுத்துள்ளார்.

அத்துடன் தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படத்தை தல அஜித் காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு செம்ம மாஸ் காட்டுகிறார்.
அத்துடன் இந்த கெட்டப்பில் தல அஜித் கோட் சூட் போட்டுக்கொண்டு கெத்தாக காட்சியளிக்கிறார். அத்துடன் அவர் மக்களோடு மக்களாக கலந்து அவர்களுடன் தல அஜித், சேர்ந்து குரூப் புகைப்படத்தையும் எடுத்துள்ளார்.

மேலும் தல அஜித் பொது இடங்களுக்கு செல்லும் போது அலப்பறையை ஏற்படுத்தாமல் ரொம்பவே சாதாரணமாக நடந்து கொள்வது அவருடைய ரசிகர்களுக்கு பிடித்தமான செயலாக மாறிவிட்டது.