இன்றைய தலைமுறையினர் நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் புதிய படம் எடுக்கப்பட்டு வருகிறது.

நடிகை சாவித்ரி’ கேரக்டரில் ‘கீர்த்திசுரேஷும், பத்திரிக்கையாளர் கேரக்டரில் ‘சமந்தாவும், மற்றொரு கேரக்டரில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் ஜெமினி கணேசன்’ கேரக்டரில் மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் ‘துல்கர் சல்மான் நடிக்க உள்ளார். ஆரம்பத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. அவர் நடிக்க மறுப்பு தெரிவித்தால் தற்போது துல்கர் சல்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் வர உள்ளது.படக்குழு ஆரம்பத்தில் சூர்யாவிடம் அணுகிய போது தற்போது பிஸியாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.  ஒரு வழியாக துல்கர் சல்மான் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.