Tamil Cinema News | சினிமா செய்திகள்
தம்பிக்கு வழி விட்டு ஒதுங்கிய அண்ணன்.. தொடர்ந்து சறுக்கும் சூர்யா
நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதனால் தற்போது இறுதிசுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.
இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா நடிப்பில் பாபநாசம் புகழ் ஜீது ஜோசப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இதனால் தம்பிக்கு வழிவிட்டு அண்ணன் சூர்யா சம்மர் வெளியீட்டிற்கு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூரரைப் போற்று திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான கைதி திரைப்படம் பெரிய ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ மற்றும் அருண் விஜய் நடித்த மாபியா ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே போட்டியில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
