நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாதவன் தமிழில் ஹீரோவாக நடித்திருக்கும் இறுதிச்சுற்று திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தைப் பார்த்த இயக்குனர்கள் பாலா மற்றும் ஷங்கர் ஆகியோர் இப்படத்தை வெகுவாக பாராட்டியிருந்தனர். அவரை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யாவும் இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சுதா மற்றும் மாதவனை தனது டிவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியுள்ளார்.