fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் அதே இயக்குனருடன் கூட்டணி.. நண்டு சிண்டு எல்லாம் ஓவரா பண்ணுது என கவலை

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் அதே இயக்குனருடன் கூட்டணி.. நண்டு சிண்டு எல்லாம் ஓவரா பண்ணுது என கவலை

நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு நடித்த அனைத்து படங்களையும் தொடர்ந்து வெற்றிப் படங்களாக கொடுத்த மனிதர். 2019ஆம் ஆண்டு கூட சூர்யாவுக்கு என்.ஜி.கே மற்றும் காப்பான் ஆகிய இரண்டு படங்கள் வெளிவந்தது. உண்மையிலேயே இரண்டும் சூர்யாவை கைவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

காப்பான் படம் வெற்றி பெற்றாலும் சூர்யாவின் ரேஞ்சுக்கு சுமார் வெற்றிதான். ஏனென்றால் இதற்கு முன் ஏழாம் அறிவு, சிங்கம் போன்ற படங்களின் வெற்றியை யோசித்து பார்க்க வேண்டும். இந்த நிலையில் சூர்யா வேறு வழியே இல்லாமல் தற்போது ஹரியுடன் கூட்டணி அமைக்கிறார்.

இவர்கள் இதற்கு முன் இணைந்த (சிங்கம் 3 படத்தை தவிர) அனைத்து படங்களும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கமர்சியலாக களமிறங்க சூர்யா முடிவு எடுத்துவிட்டார். சூர்யா படத்திற்கு முதன் முறையாக இமான் இசை அமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூரரைப் போற்று படத்திற்கு பிறகு சூர்யா நடிக்க இருந்தது சிறுத்தை சிவா இயக்கத்தில் தான். ஆனால் சிவா, ரஜினிகாந்த்தை இயக்க வாய்ப்பு கிடைத்ததும் சூர்யா படத்தை கிடப்பில் போட்டுவிட்டார். இதனால் காத்திருந்தால் வேலைக்கு ஆகாது என தனது ஆஸ்தான இயக்குனரிடம் தஞ்சம் அடைந்தார்.

இந்த படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து சூர்யா மற்றும் வெற்றிமாறன் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் சூர்யாவுக்கு, ஹரி படத்திற்கு முன் வெற்றிமாறன் படத்தில் நடித்தால் சரியாக இருக்கும் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர். அடுத்ததாக சூர்யா புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டார் என்பதும் சிறப்பான தகவல்.

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்தது தான் சூர்யா செய்வததிலேயே மிகப்பெரிய தவறு என்கிறது கோலிவுட் வட்டாரம். ஒரே படத்துல ஒட்டுமொத்தமாக வச்சி செஞ்சிட்டயேப்பா!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top