Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவை ஒழித்துக்கட்ட முடிவு.. வெடிகுண்டு மிரட்டலால் ஆடிப்போன குடும்பம்

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது.

இதனால் தியேட்டர்காரர்களுக்கு சூர்யாவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது. இருந்தாலும் தனது அடுத்தடுத்த படங்களை தியேட்டருக்கு தான் தருவேன் என உத்தரவாதம் அளித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் நீட் தேர்வு பற்றி சூர்யா வெளியிட்ட அறிக்கை ஒன்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தாக்கும் வகையில் இருந்ததால் பல்வேறுவிதமான சர்ச்சைகளுக்கு ஆளானார்.

மக்கள் சூர்யா பக்கம் இருந்தாலும் ஆட்சி அவர்களது கையில் தானே. இது சம்பந்தமாக இன்னும் சூர்யாவுக்கு என்னென்ன குடைச்சல் கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை.

ஏற்கனவே கலக்கத்தில் இருந்த சூர்யாவை அச்சுறுத்தும் வகையில் அவரது அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் காவல்துறையினருக்கு போன் செய்துள்ளனர்.

உடனடியாக சூர்யாவின் அலுவலகத்தை சோதனை செய்த அதிகாரிகள், அந்த போன் கால் வெறும் வதந்தி தான் என்றும், விரைவில் அதை யார் செய்தார்கள் என்பதை கண்டு பிடிப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
To Top