fbpx
Connect with us

Cinemapettai

தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் பெயர் என்ன தெரியுமா? வேற லெவல் மாஸ்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் பெயர் என்ன தெரியுமா? வேற லெவல் மாஸ்

நடிகர் ரஜினிகாந்த், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் தர்பார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படத்தை லைகா புரோடக்சன்ஸ் மூலம் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே புகைப்படங்கள் வெளியாகி தயாரிப்பு தரப்பை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியது. மேலும் தற்போது தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ஆதித்யா அருணாச்சலம் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார்.இந்த சீக்ரெட் வெளிவந்தது படக்குழுவுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் தலைவரின் ரசிகர்கள் இந்த மாஸான பெயரை கேட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் தர்பார் படத்தின் தீம் மியூசிக் வருகிற நவம்பர் 7-ம் தேதி மோஷன் போஸ்டர் உடன் வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top