தெலுங்கில் அந்தப் பக்திப் படம் வந்த போது அந்த அழகான கரகர வில்லன் நடிப்பு உருவம், மிரட்டும்  குரல் இதெல்லாம் கண்டு நடுங்கிப் போனார்கள் தெலுங்கு ரசிகர்கள்.

படம் பட்டையைக் கிளப்பியது.விமான விபத்தில் இறந்து போன ஹீரோயின் தான் அதில் பக்தை வேடம் செய்தார். தமிழகத்தில் மறைந்த இயக்குனர் ராமநாராயணன் தெலுங்கு உரிமையை வாங்கி தமிழில் டப் செய்து வெளியிட இங்கும் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

தமிழ் நாட்டிலும் அந்த வில்லனுக்கு அமோக வரவேற்பு என்ன உருவம்டா சாமி. என்று மிரண்டார்கள். அப்படி ஒரு வில்லனுக்கு இரண்டு குறைகள் இருந்தது. ஒன்று பயந்த சுபாவம். இரண்டு அளவிற்கு அதிகமான குடிப் பழக்கம். இதனால் மனைவிக்கும் வில்லனுக்கும் தினமும் சண்டை.

வாரத்தில் ஒரு நாள் குடிக்காமல் என்னோடு சந்தோசமாக இருக்கக்கூடாதா..நானும் பெண் தானே என்று அழுதிருக்கிறார். இவ்வளவிற்கும் மளமளவென்று படங்கள் கமிட்டாகி, கார் பங்களா என்று வசதியாகத் தான் மனைவியை வைத்திருந்தார் வில்லன்.

அதிகம் படித்தவை:  சொல்வதெல்லாம் உண்மை-'அறம் படத்தில் இரண்டு தவறான விஷயங்கள் உள்ளது.':லட்சுமி ராமகிருஷ்ணன்.

ஆனால் பெண்களுக்கு அது மட்டுமே போதுமா என்ன..? வில்லன் நடிகர் தூங்கவே நேரமின்றி நடித்துக் கொண்டிருந்தார். தனக்கு நெருக்கமான ஒரு ஹீரோவிடம் மனைவியின் புலம்பல்கள், சண்டை என அனைத்தையும் வருத்தத்தோடு பகிர்ந்தார்.

ஹீரோ கடுமையாக அட்வைஸ் செய்துள்ளார். வில்லன் ஒரு முடிவிற்கு வந்தார் குடிப்பதை நிறுத்தி விடுவது என்று.!. மனைவியிடம் இரவு சொல்ல அவரோ நம்பவில்லை. மூன்றே நாட்கள் தான் குடியை நிறுத்தினார்.

அவரால் முடியவில்லை. அதே நட்பு ஹீரோவிடம் கண்ணீர் விட்டு அழுதார் வில்லன். நீ ஆம்பளையா என்று மனைவி கேட்டு விட்டார் என்பதைக்கூறி   மீண்டும் அழ.. ஹீரோவிற்கு விஷயம் புரிந்து போனது. நல்ல  மருத்துவரை பார்ப்போம் என்றார்.

அதிகம் படித்தவை:  பெண் போலீஸுக்காக இயக்குனர் சேரனின் புது அவதாரம் : "மிக மிக அவசரம்"

அன்று முழுக்க கலங்கிய நிலையில் தான் நடித்துக் கொண்டிருந்தார் வில்லன். ஹீரோ ஆறுதல் சொல்லியபடியே இருந்தார். சூட்டிங் முடிந்து கிளம்பினார் வில்லன். ஹீரோ தைரியம் சொன்னார். வில்லன் தனக்கு மட்டுமே கேட்பதைப் போல “டிரைவர்களை மட்டும் நம்பவே கூடாது” என்று சொல்ல  ஹீரோவிற்கு கேட்டு விட்டது . பதறிப்போனார் ஹீரோ.

அன்று இரவு மூன்று மணி இருக்கும் ஹீரோவிற்கு போன் வந்தது. மனைவி ஹீரோவை எழுப்பினார். போனைக் கொடுத்தார். வில்லன் மனைவி அலறியபடி சொன்னார் “எம்புருஷன் தூக்கு போட்டுக்கொண்டு இறந்து விட்டார்” என்று.

இடிந்து போய் உட்கார்ந்தார் ஹீரோ. அந்த வில்லன் எவ்வளவு நல்லமனிதர்..எவ்வளவு இரக்க குணம் உள்ளவர். ஆனால் அளவுக்கு அதிகமான குடியால்……!? ஹீரோ அழுதபடி கிளம்பினார்.