Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாய்ப்பு கிடைத்தும் நான் தவறவிட்ட முக்கியமான படங்கள்.. இப்பொழுது கண்ணீர் விடும் ஸ்ரீகாந்த்
தமிழ் சினிமா பல நேரத்தில் பல நடிகர்கள் திறமையான ஆட்களையும் தூக்கி விடுவதற்கு மறந்துவிடும் என்பது நடிகர் ஸ்ரீகாந்த் வாழ்க்கையில் உண்மையாகி உள்ளது. பல நடிகர்களுக்கு முதல் படம் பெரிய அளவில் பேசப்படாது.
ஆனால் ஸ்ரீகாந்த் வாழ்க்கையில் அப்படியே தலைகீழாக நடந்தது. இயக்குனர் சசி இயக்கத்தில் ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படமே வெற்றி. அதன் பிறகு சில வெற்றி படங்களை கொடுத்த ஸ்ரீகாந்த், தொடர்ந்து கதை தேர்வில் சொதப்பி கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விட்டு தொலைந்துபோன ரேஞ்சுக்கு ஆகிவிட்டார்.
இடையில் தளபதி விஜய்யுடன் நடித்த நண்பன் படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. பல நேரங்களில் நாம் எடுக்கும் நல்ல முயற்சியே கெட்டதாக மாறிவிடும் என்பது ஸ்ரீகாந்துக்கு அப்பப்ப நடந்து வருகிறது. சமீபத்தில் வெளிவந்த படங்களில் ஸ்ரீகாந்தின் முயற்சி அளப்பரியது.
ஆனால் ஸ்ரீகாந்த் முதன்முதலில் அறிமுகமாக இருந்தவர்களின் பெயர்களைக் கேட்டு அதிர்ந்தது சினிமா உலகம். காதல் வைரஸ் என்ற படத்தில் முதன்முதலாக அறிமுகமாகியிருந்த ஸ்ரீகாந்த் ஒரே நாளில் அந்த படத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
அதன் பிறகு பாரதிராஜா மற்றும் கே பாலச்சந்தர் ஆகிய இருவரின் படங்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியிருக்கிறார். இறுதியில் ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தான் அறிமுகமாக நேர்ந்தது எனவும்,18 வருட சினிமாவில் இன்னும் நான் இருப்பதையே கடவுள் கொடுத்த வரம் தான் எனவும் வருத்தப்படுகிறார் ஸ்ரீகாந்த்.
ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தாலும் தமிழ் சினிமாவில் நல்ல இடத்தைப் பெறமுடியும். அருண் விஜய் கூட அப்படித்தான்..
