நடிகர் உதயநிதி அடுத்ததாக சிகரம் தொடு புகழ் கௌரவ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு ஜூலை இறுதியில் தொடங்குகிறது.

இப்படத்தில் சூரி ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுவரை காமெடியனாக நடித்துவந்த சூரி இப்படத்தில் செகன்ட் ஹீரோ என்று சொல்லும் அளவு ஒரு கனமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம்.