Tamil Cinema News | சினிமா செய்திகள்
எது மீனா வீட்ட நான் வாங்கினேனா? நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும்.! புரளியால் பதறிய சூரி
சந்தானம் காமெடி டிராக்கில் இருந்து விலகிய பிறகு அந்த இடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டவர் சூரி. காரணம் வேறு எந்த காமெடி நடிகருமே தமிழ் சினிமாவில் இல்லை என்பதைப்போல தொடர்ந்து பல படங்களில் புக் செய்யப்பட்டார்.
அதை உசாராக பயன்படுத்திக்கொண்ட சூரி, சினிமா மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். அந்த வகையில் சூரி தற்போது இரண்டு பெரிய ஹோட்டல்களுக்கு சொந்தக்காரராக உள்ளார்.
தற்போது ஒரு நாளைக்கு அதிக சம்பளம் வாங்கும் காமெடியனாக உள்ள இவர், சமீபத்தில் சாலிகிராமத்தில் உள்ள நடிகை மீனாவின் வீட்டை சுமார் 6 கோடி செலவில் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் அது முற்றிலும் வதந்தி என சூரி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இது உண்மையா? பொய்யா? என்பது இருவரும் கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரிய வாய்ப்புள்ளது.
மேலும் அது போல் நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கு தெரிவிக்கிறேன் என கூறியிருக்கிறார். சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
