நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் மோகன்ராம். இவர் அண்மையில் நடைபெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டார்.

திருட்டு விசிடி தொடர்பாக அந்த விவாதம் நடைபெற்றது. அப்போது பாகுபலி 2 படத்தை பலரும் திருட்டு விசிடியில் பார்த்து வருவதற்கு மோகன் ராம் எதிர்ப்பு தெரிவித்தார்.

” தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்று சொன்னது ஒரு காலம். இப்போது தமிழர்கள் ஓசியில் கிடைத்தால் சாப்பிட்டு விடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்” என கடுமையாக சாடினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எழுத்தாளர் மதிமாறன், ” ஹாலிவுட் படங்களின் கதைகளை பணம் கொடுக்காமல், திருடி தமிழில் சினிமா எடுப்பவர்களை என்ன சொல்வது” என எதிர்கேள்வி எழுப்பினார்.